Wednesday 9 July 2014

நோன்பு திறக்கையில் பேணவேண்டியவை…


நோன்பு திறக்கும் போது சாப்பிட்டுக்  கொண்டிருக்கையில் தொழுகைக்கு இகாமத்  சொல்லப்பட்டு விட்டால்  உணவை விட்டு விட்டு தொழப் போகிறேன்
என்று பாதி பசியுடன் சென்று விடக்  கூடாது, முதலில் பசியாறும்
அளவு உணவை உண்ண வேண்டும், பின்னர் தான்
தொழ செல்ல வேண்டும். (நோன்பு நேரம் என்பதால் அதற்கேற்றவாறு இப்பதிவு,  நோன்பு திறக்கையில் மட்டுமல்ல
எக்காலத்திற்கும், எப்போதைக்குமான  சட்டமும் இதுவே…)

நீங்கள் மஃக்ரிப் தொழுவதற்கு முன்னர் (உங்கள் முன்) இரவு உணவு வைக்கப்பட்(டு, அத்தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்)டால் முதலில் உணவை உண்ணத் தொடங்குங்கள்.உங்களது இரவு உணவை விடுத்து (
தொழுகைக்காக) நீங்கள் அவசரப்படவேண்டாம்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 967

No comments:

Post a Comment