Friday 19 July 2013

மரணத் தருவாயில் உள்ளவருக்காக பிறர் செய்ய வேண்டியது

மரணத் தருவாயில் உள்ளவரிடம் பிறர் ஏகத்துவ உறுதிமொழியான லாயிலாஹ இல்லல்லாஹ்வை கூறச் சொல்ல வேண்டும், அப்படி அவர் இறப்பதற்கு முன் கூறிய கடைசி வார்த்தை “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்றாகிவிடுமானால் அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிடும். இதை இறப்பின் நெருக்கத்தில் உள்ள முஸ்லிமிடம் மட்டும் அல்ல, நமக்குத் தெரிந்த
முஸ்லிமல்லாதவர்களிடமும் கூறலாம்.

உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு “லாயிலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லிக் கொடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: அபூதாவூத் 3117

Narrated Abu Sa’id al-Khudri (ra):
Allah’s Messenger (sal) as saying: Exhort to recite “La Ilaha Illallah” (There is no god but Allah) to those of you who are dying.
[Abu dawud 3117]

No comments:

Post a Comment