Thursday, 18 July 2013

360 மூட்டிணைப்புகள்

 இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே, மறுமையில் வெற்றி பெற இவ்விரண்டை பின்பற்றினால் மட்டுமே முடியும். அதற்கான ஆதாரங்கள்:

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 3:132

அவர் (முஹம்மத்) மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
திருக்குர்ஆன் 53:3,4

“அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.
திருக்குர்ஆன் 4:61


இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக்
கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.
திருக்குர்ஆன் 4:80

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!.
திருக்குர்ஆன் 29:48

‘ மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை ‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: ஹாகிம் 318

“அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக்
கடைப்பிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன்” எனறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4711

இதிலிருந்து குர்ஆன் எப்படி மார்க்க ஆதாரமோ அதே போல் ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்கள் என்பதையும், முஹம்மது (ஸல்) அவர்களின் மார்க்க அடிப்படையிலான சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைக் கொண்ட ஹதீஸ்களும் இறைவனால் அறிவிக்கப்பட்டவை தான் என்பதையும், அவராகக் கூறியதில்லை என்பதையும் அறியலாம்.
ஹதீஸ்கள் பெயரில் சில இட்டுக்கட்டப்பட்டவைகள் கலக்கப்பட்டதை பல அறிஞர் பெருமக்கள் அவைகள் மக்களுக்கு எவை எவையென்று பகுத்தும் காட்டி விட்டனர். (அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக…)
திருக்குர்ஆனில் பல அறிவியல் உண்மைகள் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளதைப் போல் ஹதீஸ்களும் பல அறிவியல் உண்மைகளை முன்னறிவிப்பு செய்துள்ளன. அவற்றில் ஒன்றை இப்பதிவில் காண்போம்:
மனிதனுக்கு 360 மூட்டிணைப்புகள் (360 Joints) உள்ளதாக பின்வரும் ஹதீஸ் கூறுகிறது:

“ஆதமின் மக்களில் (மனிதர்களில்) ஒவ்வொருவரும் முந்நூற்று அறுபது மூட்டிணைப்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முந்நூற்று அறுபது மூட்டிணைப்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப்
பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்),
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 1833

மனிதனுக்கு 360 மூட்டிணைப்புகள் (360 Joints) உள்ளதை இன்றைய அறிவியல், உண்மை என நிரூபிக்கிறது, இது சம்பந்தமாக பல மருத்துவ இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள்:


www.mplsortho.com
www.livestrong.com
www.healthmd.com
www.jlquiropractico.com
www.sooperarticles.com
corawen.com
www.theboneandjointcenterofseattle.com
www.atozmenopause.com
jointstress.com
www.avvo.com/doctors
www.elcaminoobgyn.com

இதை கண்டிப்பாக எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது என்ற தனி மனிதரால் கூற முடியாது. இறைவன் தான் அவருக்கு கூறியிருக்க முடியும். எனவே ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்கள் என்பதையும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதையும் இதிலிருந்து விளங்கலாம்.

எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!
திருக்குர்ஆன் 3:53

No comments:

Post a Comment